Wednesday, December 20, 2006

உணர்ச்சிவசப்படாதீர்கள் வலைப்பதிவர்களே!!!

சாந்தி விஷத்தில் எல்லாருமே உணர்ச்சி வசப்பட்டுதான் பதிவு போடுகிறார்கள். சாந்தி என்ற பெண்ணிற்கு தனிப்பட்ட முறையில் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்ளலாம். ஆனால் அதற்காக அவரும் பெண்தானே பெண்ணாகத்தானே பிறந்தார். அவர் சாதித்தது சாதித்ததுதான், ஹிந்து *** தின்னும் பத்திரிக்கை என்று ஓவரா உணர்ச்சி வசப்படாதீர்கள்.

ஹிந்து முத்லான பத்திரிக்கைகள் சாந்திக்கு ஆதராவாகத்தான் எழுத வேண்டும். இந்தியர் என்பதால் அவருக்குத்தான் சார்பாக எழுத வேண்டும் என்று சொலவது எந்த விதத்தில் நியாயம்? வித்தியாசமான செய்திகள் முதல்பக்கத்தில் வருவது தவறில்லை. இந்த பாலின சோதனை செய்தி பற்றி மற்ற விளையாட்டு வீராங்கனைகளுக்கு விழிப்புணர்வு வருவதும் தேவைதான்.

ஹிந்து கூறியது போல சாந்தி ஏற்கனவே ரயில்வே துறையால் பாலின சோதனையில் முடிவு தெரிந்தும் ஆசிய விளையாட்டுப்போட்டியில் கலந்து கொண்டது குற்றம். அறியாமையால் செய்திருந்தால் மன்னிக்கலாம். ஆனால் இந்த விஷயம் தெரிந்த அவரது பயிற்சியாளர் முதலியானோர் குற்றவாளிகள்.

சாந்தி பெண்ணாகவே பிறந்திருக்கட்டும் வளர்ந்திருகட்டும். தற்போது பெண்கள் பிரிவில் விளையாட தகுதியில்லை. இதில் என்ன சர்ச்சை இருக்கிறது.

Thursday, December 07, 2006

நீங்கள் அமைச்சரானால்...! கட்டுரைப் போட்டி

கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி!

தமிழ்நாடுடாக்.காம் என்ற இணையம் தமிழகத்தில் பயிலும் கல்லூரி மாணவர்களுக்காக மெகாபரிசுகளுடன் ஒரு போட்டியை நடத்த முன்வந்திருக்கிறது. இந்த இணையத்தள நிர்வாகிகள் சத்தமில்லாமல் பல சமூகசேவைகளை ஏற்கனவே தமிழகத்தில் செய்து வருகிறார்கள்.

சென்னையில் பாவணர் பெயரில் அமைந்த தமிழ்வழி பள்ளிக்கூடம் சில சமூக விரோதிகளால் இடிக்கப்பட்டபோது, மீண்டும் கட்டடம் கட்ட இந்த இணைய உரிமையாளர் நிதி வழங்கியிருந்தார். இருளர் இனத்தைச் சேர்ந்த ஏழைமாணவிகள் சிலருக்கு கல்விபயில நன்கொடை கொடுத்திருந்தார். அயல்நாட்டில் பணிபுரியும் அவர் விடுமுறையில் தமிழகம் வரும்போது இதுபோல ஏராளமான சேவைகளை செய்து வருகிறார்.

இணையம் மூலமாகவும் களத்தில் இறங்கியும் சேவை செய்துவரும் அந்த தமிழர் தன் பெயரை வெளியிடவேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இப்போது கல்லூரி பயிலும் மாணவர்களுக்காக ஒரு கட்டுரைப் போட்டி நடத்தி பரிசும் வழங்க முன்வந்திருக்கிறார். கல்லூரி மாணவர் என்றில்லை +2 முடித்து அஞ்சல் வழியாக படித்துவரும் மாணவர்களும் கலந்து கொள்ளலாம். உங்களுக்குத் தெரிந்த மாணவர்களுக்கு இந்தச் செய்தியை தெரியப்படுத்தி போட்டியில் பங்கேற்க வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


தலைப்பு:
உங்களுக்கு அமைச்சராவதற்கு ஒரு சந்தர்ப்பம் தந்தால் எந்த துறையைத் தேர்ந்தெடுப்பீர்கள்?
உங்கள் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன? எப்படி அத்துறையை முன்னேற்றுவீர்கள்?

பங்குபெறுவதற்கான தகுதிகள்:
+2 மேற்படிப்புப் படிப்பவராக/முடித்து 3 ஆண்டுகளுக்குள் இருத்தல் வேண்டும்.
கட்டுரை கூடியவரை தமிழில் இருத்தல் வேண்டும்.

1 பக்கத்தில்
பெயர்
விலாசம்
பிறந்த திகதி
பால்
படிக்கும்/படித்த துறை
----------------
1 பக்கத்தில்
படிக்கும்/படித்த துறை வேறாயின் இத்துறையைத் தேர்ந்தெடுத்ததன் காரணம்.

1 அல்லது 2 பக்கத்தில்
கட்டுரையின் சுருக்கம்.

5 - 8 பக்கங்களில்
ஆதாரங்களுடனான கட்டுரை

-------------------

கட்டுரை எங்களுக்குக் கிடைக்க வேண்டிய கடைசி திகதி: March 31, 2007
வெற்றியாளர்கள் அறிவிக்கப்படும் திகதி: 2007ம் ஆண்டு தமிழ் வருடப்பிறப்பு
பரிசு வழங்கப்படும் திகதி: பின்னர் அறிவிக்கப்படும்

பரிசுகள்:முதலாவது: ரூ25,000
இரண்டாவது: ரூ10,000
மூன்றாவது: ரூ5,000
ஆறுதல் பரிசுகள்: ரூ2,000 (20)

அனுப்பி வைக்க வேண்டிய விலாசம்:
Tamilnadutalk.com
#67 - 5th Lane
Chennai-39

தொலைபேசி இலக்கம்: 044-45561101

உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் இங்கே பதியுங்கள்.
http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=4503
பதிலளிக்கப்படும்.


பயன்படக்கூடிய இணைப்புக்கள் & விடயங்கள்:
கீழ் தரப்பட்டுள்ள இணையத்திலுள்ள தமிழ்ப் பக்கங்களைப் பார்வையிடுவதற்கு TAM-Kalaignar மற்றும் TAMLKamban
எழுத்துருக்கள் தேவை.

தமிழ்நாட்டு வரவு/செலவு களை அறிய
தமிழ்நாடு அரசின் இணையத்தளம் - தமிழில்
தமிழ்நாடு அரசின் இணையத்தளம் - ஆங்கிலத்தில்