உணர்ச்சிவசப்படாதீர்கள் வலைப்பதிவர்களே!!!
சாந்தி விஷத்தில் எல்லாருமே உணர்ச்சி வசப்பட்டுதான் பதிவு போடுகிறார்கள். சாந்தி என்ற பெண்ணிற்கு தனிப்பட்ட முறையில் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்ளலாம். ஆனால் அதற்காக அவரும் பெண்தானே பெண்ணாகத்தானே பிறந்தார். அவர் சாதித்தது சாதித்ததுதான், ஹிந்து *** தின்னும் பத்திரிக்கை என்று ஓவரா உணர்ச்சி வசப்படாதீர்கள்.
ஹிந்து முத்லான பத்திரிக்கைகள் சாந்திக்கு ஆதராவாகத்தான் எழுத வேண்டும். இந்தியர் என்பதால் அவருக்குத்தான் சார்பாக எழுத வேண்டும் என்று சொலவது எந்த விதத்தில் நியாயம்? வித்தியாசமான செய்திகள் முதல்பக்கத்தில் வருவது தவறில்லை. இந்த பாலின சோதனை செய்தி பற்றி மற்ற விளையாட்டு வீராங்கனைகளுக்கு விழிப்புணர்வு வருவதும் தேவைதான்.
ஹிந்து கூறியது போல சாந்தி ஏற்கனவே ரயில்வே துறையால் பாலின சோதனையில் முடிவு தெரிந்தும் ஆசிய விளையாட்டுப்போட்டியில் கலந்து கொண்டது குற்றம். அறியாமையால் செய்திருந்தால் மன்னிக்கலாம். ஆனால் இந்த விஷயம் தெரிந்த அவரது பயிற்சியாளர் முதலியானோர் குற்றவாளிகள்.
சாந்தி பெண்ணாகவே பிறந்திருக்கட்டும் வளர்ந்திருகட்டும். தற்போது பெண்கள் பிரிவில் விளையாட தகுதியில்லை. இதில் என்ன சர்ச்சை இருக்கிறது.
ஹிந்து முத்லான பத்திரிக்கைகள் சாந்திக்கு ஆதராவாகத்தான் எழுத வேண்டும். இந்தியர் என்பதால் அவருக்குத்தான் சார்பாக எழுத வேண்டும் என்று சொலவது எந்த விதத்தில் நியாயம்? வித்தியாசமான செய்திகள் முதல்பக்கத்தில் வருவது தவறில்லை. இந்த பாலின சோதனை செய்தி பற்றி மற்ற விளையாட்டு வீராங்கனைகளுக்கு விழிப்புணர்வு வருவதும் தேவைதான்.
ஹிந்து கூறியது போல சாந்தி ஏற்கனவே ரயில்வே துறையால் பாலின சோதனையில் முடிவு தெரிந்தும் ஆசிய விளையாட்டுப்போட்டியில் கலந்து கொண்டது குற்றம். அறியாமையால் செய்திருந்தால் மன்னிக்கலாம். ஆனால் இந்த விஷயம் தெரிந்த அவரது பயிற்சியாளர் முதலியானோர் குற்றவாளிகள்.
சாந்தி பெண்ணாகவே பிறந்திருக்கட்டும் வளர்ந்திருகட்டும். தற்போது பெண்கள் பிரிவில் விளையாட தகுதியில்லை. இதில் என்ன சர்ச்சை இருக்கிறது.



8 Comments:
// சாந்தி பெண்ணாகவே பிறந்திருக்கட்டும் வளர்ந்திருகட்டும். தற்போது பெண்கள் பிரிவில் விளையாட தகுதியில்லை. இதில் என்ன சர்ச்சை இருக்கிறது. //
சுத்தப் பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது.
ஆண் மற்றும் பெண் இந்த இரண்டு பாலினங்கள் தான் உள்ளது. ஆண்களில் பெண்ணின் குணாதியசங்கள் மிகும் பட்சத்தில் சட்டரீயாக அவர் ஏதாவது ஒரு பாலினத்தினை தேர்வு செய்ய அவருக்கு உரிமை வழங்க வேண்டும். இந்தியாவினை பொருத்தவரை இது கேள்விக்குறி தான். அதனை போல் தான் பெண்களும்.
//ஆண் மற்றும் பெண் இந்த இரண்டு பாலினங்கள் தான் உள்ளது. ஆண்களில் பெண்ணின் குணாதியசங்கள் மிகும் பட்சத்தில் சட்டரீயாக அவர் ஏதாவது ஒரு பாலினத்தினை தேர்வு செய்ய அவருக்கு உரிமை வழங்க வேண்டும்.//
அப்படியனால் ஆணாக பிறந்து பெண்தன்மை மிகும் அரவானிகளும் பெண்களுடன் போட்டியிடுவார்கள். அப்போது அரவானிகளுடன் பெண்கள் விளையாட்டில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா?
சமூக வாழ்க்கையில் ஆணா பெண்ணா என்பது வேறு, இது போன்ற விளையாட்டு வேறு.
// சாந்தி பெண்ணாகவே பிறந்திருக்கட்டும் வளர்ந்திருகட்டும். தற்போது பெண்கள் பிரிவில் விளையாட தகுதியில்லை. இதில் என்ன சர்ச்சை இருக்கிறது. //
இப்படி சொல்ல உங்களுக்கு எப்படி முடிகிறது?பிறக்கும்போதும்,வளரும் பெண்ணாக இருப்பவர்கள் உடற்கோளாறுகளால் குணதியசத்தில் மாறுபடுவது அவர்கள் குற்றமல்லவே.மேலும் இங்கு பதக்கத்தை மட்டும் பார்க்காதீர்கள் மனித உணர்வுகளையும் பாருங்கள்.தோற்றத்தாலும்,உடற்கூறுகளாலும் பாதிக்கப்பட்ட அவளின் மனதைப் பாருங்கள்.
//இப்படி சொல்ல உங்களுக்கு எப்படி முடிகிறது?பிறக்கும்போதும்,வளரும் பெண்ணாக இருப்பவர்கள் உடற்கோளாறுகளால் குணதியசத்தில் மாறுபடுவது அவர்கள் குற்றமல்லவே.மேலும் இங்கு பதக்கத்தை மட்டும் பார்க்காதீர்கள் மனித உணர்வுகளையும் பாருங்கள்.தோற்றத்தாலும்,உடற்கூறுகளாலும் பாதிக்கப்பட்ட அவளின் மனதைப் பாருங்கள்.//
கௌசி, உடல் ஊனம் பரிதாபத்திற்குறியதுதான். அதற்காக ஆண் தன்மை அதிகமாக இருக்கிறது என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒருவரை, சாதரண பெண்களுடம் போட்டியிட அனுமதிக்க முடியுமா? அப்படி அனுமதித்தாக் அது நியாயமான போட்டியாக இருக்குமா?
அவளின் மனதைப் பாருங்கள் என்று சொல்கிறீர்களே, தடகள போட்டிகள் மனதைப்பார்க்கும் விளையாட்டு அல்ல. உடல் உறுதியின் துணையால் போட்டியிடும் விளையாட்டு. இதில் சம இனத்தவர்தானே போட்டியிட முடியும். சாந்திக்கு ஆண் தன்மை மிகுந்திருக்கிறது என்றால் அவர் மற்ற சாதாரண பெண்களைவிட உடல் உறுதியில் ஆண்களைப்போல மேம்படுகிறார்தானே.
சாந்திக்கு பாலின கோளாறு என்றால் மற்ற வழிகளில் அவருக்கு உதவலாம். பெண்களுடன் தடகள போட்டியிட அனுமதிப்பதைத்தவிர.
//"உணர்ச்சிவசப்படாதீர்கள் வலைப்பதிவர்களே!!!"//என்பது உங்கள் பதிவின் தலைப்பு. ஆனால் பிரச்சினை என்னவென்றால் சாந்தி ஒரு திருநங்கையாக இருக்கக்கூடும் அல்லது அது போன்ற குறைபாடுதான் என்ற எண்ணத்திலேயே உங்களைப் போன்றவர்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.
ஆனால் இது அவருக்கு புகழ் தேடித்தந்த அதே விளையாட்டில் அதிதீவிரமாக மூழ்கிப்போனதால் ஏற்பட்ட ஹார்மோன் குறைபாடு மட்டுமே என்று நாங்கள் கருதுகிறோம். இதை சரியான மருத்துவ சிகிட்சையினால் சரிப்படுத்த முடியும் என்றே மருத்துவர் எஸ்கே அவர்களும் தெரிவித்துள்ளார். எனவே இதற்கு முந்தைய போட்டிகளில் எல்லாம் இல்லாத ஒரு பிரச்சினை, அது தற்போது அதிகரித்திருப்பதால் உருவான பிரச்சினை என்றால் அதை சரி செய்துகொள்ள அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். மாறாக அவர் பெண்களுடன் போட்டியிட தகுதியற்றவர் என்று ஒரேயடியாக மறுத்துரைப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்?
//ஆனால் பிரச்சினை என்னவென்றால் சாந்தி ஒரு திருநங்கையாக இருக்கக்கூடும் அல்லது அது போன்ற குறைபாடுதான் என்ற எண்ணத்திலேயே உங்களைப் போன்றவர்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.
ஆனால் இது அவருக்கு புகழ் தேடித்தந்த அதே விளையாட்டில் அதிதீவிரமாக மூழ்கிப்போனதால் ஏற்பட்ட ஹார்மோன் குறைபாடு மட்டுமே என்று நாங்கள் கருதுகிறோம்.//
//மாறாக அவர் பெண்களுடன் போட்டியிட தகுதியற்றவர் என்று ஒரேயடியாக மறுத்துரைப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்? //
கடந்த ஆண்டு ரயில்வேயில் வேலைக்கு முயற்சித்த போது, ரயில்வே மெடிகல் போர்டால் இவரது ஜென்டரை முடிவு செய்ய முடியாததால் தான் அவர்களால் வேலை கொடுக்க முடியவில்லை. ரயில்வே போர்டில் ஜென்டரை தீர்மானிக்க ஹார்மோன் டெஸ்ட் எல்லாம் செய்திருப்பார்கள் என்று தோன்றவில்லை.
யூரின் டெஸ்ட் சாம்பிள் எடுக்கும்போது நேரில் கவனித்துக்கொண்டிருந்த ஒரு (பெண்)அதிகாரி தனது சந்தேகத்தை எழுப்பியதையும் ஒருவர் சன் தொலைக்காட்சியில் கூறினார்.
இவ்வளவு வெளிப்படையாக சந்தேகம் எழுந்த பின்னும் அவரும் அவரது பயிற்சியாளரும் இதை இந்திய ஒலிம்பிக் கவுன்சிலிடம் இது பற்றி தெரிவிக்கவில்லை.
இதெல்லாம் இருக்கட்டும். நான் இந்த பதிவை இட்டதன் நோக்கம், அனைத்து பதிவர்களும் உண்மையைப் பார்க்காமல் வெறுமனே உணர்ச்சி வசப்பட்டு பேசுவதுதான். இன்னும் பலருக்கு பெண்கள் பிரிவில் ஆண் தன்மை மிகுந்தவரை அனுமதிக்காததன் நோக்கமே தெரியவில்லை. பெண் மனம் அது இதுவென்று பேசுகின்றனர்.
பெண்கள் பிரிவில் ஆண் தன்மை மிகுந்தவரை அனுமதித்தால், மற்ற சாதாரண பெண்கள் இவருடன் போட்டியிட முடியாது, அது நியாயமாக இருக்காது என்பதால்தான் அனுமதிப்பதில்லை.
சாந்தி தன்மானத்துடன் வாழ்வதற்குறிய அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமை. அது போல பெண்கள் விளையாட்டில் நியாயமான போட்டியை உறுதி செய்வது விளையாட்டுத்துறையின் கடமை. உணர்ச்சி வசப்பட்டு இரண்டையும் போட்டு குழப்பக்கூடாது.
ஹார்மோன் குறைபாடு மருத்துவ சிகிட்சையினால் சரிப்படுத்தப் பட முடியும் எனில் அதன்பிறகும் அவர் பெண்களுடன் போட்டியிடக்கூடாது என்பது நியாயமானதல்ல. அதனால் அவர் வலிமை அதிகரித்திருக்கும் எனபது ஏற்புடையதுமல்ல.
+
வலிமை அதிகரித்ததனால் தான் குறைபாடே உருவானதே தவிர குறைபாட்டினால் வலிமை அதிகரிக்கவில்லை என்பதே நாங்கள் கூறுவது.
Post a Comment
<< Home